புதன், 9 அக்டோபர், 2013

மாரடைப்பு - இரத்தம் உறைதல்

மாரடைப்பில் உறைந்த இரத்தம் தான் முக்கியமான ஒரு பங்கு வகிக்கிறது. சாதரணமாக இரத்தம் உறைதல் நம்ம உடம்புக்கு தேவையான ஒன்று. ஒரு காயம் ஏற்ப்படுகின்றது என்று வைத்துக்கொள்வோம், இந்த காயம் மூலமாக நெறைய இரத்தம் வெளியேறிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இரத்தம் உறைகிறது. இரத்தம் உறைவதற்கு முக்கியமான தேவை ஆக்ஸிஜென். எதன் கூடவும் கூட்டு சேராமல் ஆக்ஸிஜென் தனியாக இருக்கணும். நம்ம சுத்தி இருக்கிற வளிமண்டலத்தில ஆக்ஸிஜென் அப்படி தான் இருக்கு. அதுனால காயம் பட்ட உடனே வளிமண்டலத்தில இருக்கிற ஆக்ஸிஜென் இரத்தம் உறைவதை ஆரம்பித்து வைக்கிறது. இந்த ஆக்ஸிஜனை  ப்ளேட்லட் (platelet) என்ற ஒரு “செல்” கண்டுணர்ந்து துரோம்பின் (thrombin) என்ற ஒரு புரதத்தை வெளியேற்றுகிறது. துரோம்பின் என்ற புரதம் பைப்ரின் என்ற புரதத்தை உருவாக்குவதன் மூலமாக ஒரு வலை ஒன்றை உருவாக்குகிறது. எப்படி வலைகளில் மீன் சிக்குகிறதோ அதேமாதிரி இரத்தத்திலுள்ள அனைத்து செல்களும் சிக்கி விடும். இந்த வலை காயம் உள்ள இடத்தில் உருவாகும். இந்த வலைல சிவப்பு இரத்த அணுக்களும் இருப்பதினால் தான் உறைந்த இரத்தம் சிவப்பாக இருக்கும். இதுல முக்கியமா கவனிக்க வேண்டியது என்னன்னா ஆக்ஸிஜென் தனியாக இருக்கணும், எந்த வேறு அணுவோடவும் சேர்ந்து இருக்க கூடாது. இதன் காரணமாகவே இரத்தத்தில் ஆக்ஸிஜென் எப்பொழுதுமே ஹீமோக்ளோபின் என்ற புரதத்தின் கூடவே இருக்கும். ஆக்ஸிஜெனின் தேவை எங்கு இருக்கிறதோ அங்க போய் கார்பன் டையாக்சைட் வாங்கிகிட்டு ஆக்ஸிஜெனை குடுத்து விட்டு வரும். இப்போ ஆக்ஸிஜென் புரதத்தின் கூட சேர்ந்து இருக்காமல் தனியாக இருந்தது என்றால் என்ன ஆகும்? இரத்தம் நாளங்களுக்கு உள்ளேயே உறைந்து விடும். அப்போ எந்த இடத்துக்கும் இரத்தம் போகாது. இது தாங்க இயற்கையின் விளையாட்டு. 

இதய நாளத்தில் உறைந்த இரத்தம் 

இப்ப மாரடைப்பில எப்படி இந்த இரத்தம் உறையுதுன்னு பாக்கறீங்களா? இந்த இடத்துல முக்கியமான காரணியாக வருவது மனஅழுத்தம். வேலைப்பளுவினால், அதிக துக்கத்தினால் மற்றும் வேறு சில காரங்களினாலும் வரும் இந்த மனஅழுத்தம்தான் மாரடைப்பிற்கு முக்கியமான காரணியாகி விடுகிறது. தேவையல்லாத பதட்டம் கூட ஒரு சில நேரங்களில் காரணியாக அமைந்து விடுகிறது. இந்த மனஅழுத்தம் நெறைய எதிர்செயல் செய்யும் மூலக்கூறுகளை இரத்தத்தில் உருவாக்கி விடுகிறது. இதனால் ஆக்ஸிஜென் இல்லாமலேயே இந்த மூலகூற்றின் காரணமாக துரோம்பின் வெளியேறிவிடும். துரோம்பின் வெளியேறினால், இரத்தம் உறைய ஆரம்பிக்கும். இதனால் இதயதிற்க்கான நாளங்களில் இரத்தம் செல்லாது. இதயத்திற்கு இரத்தம் செல்ல வில்லை எனும்போது இதயம் சிறிது சிறிதாக செயல் இழக்க ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில், இதயம் இயங்காமலே போய்விடும். இதுதான் மாரடைப்பு.  இதனால் தான் மனதை எப்பொழுதுமே சந்தோஷமாக வைத்துகொள்ள சொல்கிறார்கள், மனஅழுத்தம் உருவாகாமல் தடுத்தால், மாரடைப்பை தடுத்து விடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக