மாரடைப்பு இருதயத்திலுள்ள நாளங்களில் இரத்தம்
உறைவதால் வருதுன்னு சொல்றீங்க, சரி இங்க கொழுப்பு, அதுவும் கெட்ட கொழுப்பு எப்படி
காரணமாகும்ன்னு சந்தேகம் வருதா? இத பத்தி விரிவா தெரிஞ்சிக்கணும்னா நம்ம முதல்ல
சிறிது மனித உடம்ப பத்தி தெரிஞ்சிக்குவோம். நம்ம எல்லாத்துக்கும் தெரிஞ்ச ஒன்னு
என்னன்னா “செல்”தான் எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படை. ஒரு செல் உயிரியான
பாக்டீரியா முதல் உலகிலேயே பெரிய உயிரினமான நீலத்திமிங்கிலம் வரைக்கும் இது ஒன்னு
தான். இதுல ஒரு செல் உயிரி பத்தி பிரச்னை இல்ல, இந்த பல செல் உயிரி இருக்கு
பாருங்களேன், அதுக்குள்ள இருக்கிற ஒவ்வொரு “செல்”லும் ஒரு உயிர். நம்ம சாப்படற
சாப்பாடு ஜீரணம் ஆகி, உடம்பில இருக்கிற ஒவ்வொரு “செல்”லையும் சேரனும். இதுக்கு
தான் இரத்தமும் இரத்த நாளங்களும். இந்த இரத்தத்த ஒவ்வொரு இடமாக அனுப்ப தான் இதயம்
துடிச்சுகிட்டு இருக்கு. இரத்த நாளங்களிலும் இந்த “செல்” தான் இருக்கு. இத எப்படி
புரிஞ்சிக்கலம்னா “கால்வாய்”ய மனசுல நெனச்சுக்குங்க. கால்வாய்ல வர்ற தண்ணி தான்
வயலுக்கு பாயுது. இப்போ கால்வாய் நடுவுல ஓடற தண்ணி, இரத்தம். கால்வாய் ஓரமா
முண்டுக்கல்லு வச்சு பார்டர் குடுத்து இருப்போம்ல அது தான் “செல்”லு. எப்படி
கால்வாய்ல போற தண்ணிய திசை மாறாம இந்த முண்டுகல்லு எல்லாம் உதவுதோ, அதே மாதிரி
நம்ம ஒடம்புல எந்த இடத்துக்கு எல்லாம் இரத்தம் போகணுமோ அந்த இடத்துக்கு எல்லாம்
இந்த நாளங்கள் போகும். சரி, முண்டுகல்லு மேல சிறிது சிறிதா மணல் மேட ஆரம்பிச்சதுனா
என்ன ஆகும்? தண்ணி போகிற இடம் குறையும். நீரோட்டம் அதிகமாகும். இப்பிடியே ஒரு ஊருல
இருக்கிற குப்பை, பிளாஸ்டிக் எல்லாத்தையும் கால்வாயில ஒரு இடத்துல கொட்டுனோம்னா, கால்வாய்ல
அந்த ஒரு இடத்துல மட்டும் கால்வாயோட அகலம் கம்மி ஆகிட்டே வரும். அப்ப பாசனத்துக்கு
நீர் கிடைக்காது, ஆனா அகலம் கம்மியான இடத்துல நீரோட்டம் அதிகரிக்கும். கால்வாய்ல
வருகின்ற மிச்ச எச்சங்களும் இருக்கிற பாதையை அடைத்துக்கொண்டு தண்ணீர் செல்ல
விடாது. பயிர் நாசம் ஆகிவிடும். இத அப்படியே நம்ம உடம்புல பொருத்தி பாருங்க.
(இரத்த நாளம் கொழுப்பு அடைக்கும் முன், கொழுப்பு அடைத்த பின்)
(image courtesy: http://www.webmd.com)
கால்வாய் - இரத்த நாளம்;
முண்டுகல்லு – செல்;
மணல் மேடுறது – கொழுப்பு படர்வது;
குப்பை – தேவை இல்லாத இடத்துல கொழுப்பு குமிதல்;
மிச்ச எச்சம் – இரத்தம் உறைதல்;
இப்படி இரத்தம் உறையறதுனால மேற்கொண்டு இரத்தம்
போகாது. புரியுது புரியுது, அதான் மெலிதான தேகம் உள்ளவங்களுக்கு எப்படி கொழுப்பு
படரும்ன்னு கேக்கறீங்க... இந்த கெட்ட கொழுப்புக்கு மெலிதான பருமன்னான தேகம்
அப்டின்னு வித்தியாசம் இல்லேங்க. யாரா இருந்தாலும் அழுத்தம் (உடல் மற்றும் மன) அதிகமானாலும்
இந்த விதமான கொழுப்போட அளவு அதிகரிக்கும். நம்ம குடுக்குற அழுத்ததினால எல்லா
“செல்”லுக்கும் அதிகமான சக்தி தேவைப்படும். தூங்காம, சரியா சாப்பிடாம, தேவை இல்லாத
பழக்கங்கினால் “செல்”லுக்கு தொடர்ந்து இரத்தம் தேவைப்பட்டுகிட்டே இருக்கும். ஒரு
இயந்திரம் தொடர்ந்து ஓடிகிட்டே இருந்துச்சுன்னா பழுதாக ஆரம்பிக்கும். இதே மாதிரி
தான், தொடர்ந்து இரத்தம் கொண்டு போறதினால இரத்த நாளங்களும் பழுதாக ஆரம்பிக்கும்.
அப்ப இந்த கெட்ட கொழுப்பு இந்த செல்கள் மேல படிய ஆரம்பிக்கும். அப்புறம் என்ன
கால்வாய்ல தண்ணி போகாது. மெலிதான தேகமா இருந்தா என்ன பருமனான தேகமா இருந்தா என்ன,
உடலில் அல்லது மனதில் அழுத்தம் அதிகரிக்கும் போது கெட்ட கொழுப்பு அதிகமாகும்,
நாளங்களில் படியும். இந்த நிலைமைக்கு பெயர் தமனி தடிப்பு (Atherosclerosis). அதுனால பருமனா இருக்குறவங்களுக்கு எல்லாம் கெட்ட கொழுப்பு
படிஞ்சு மாரடைப்பு வரும்னு இல்ல மெலிதாக
இருக்குறவங்களுக்கு மாரடைப்பு வராதுன்னு சொல்ல முடியாது. யாரு யாருக்கெல்லாம்
அழுத்தம் அதிகமாக இருக்கோ அவங்களுக்கு எல்லாம் மாரடைப்பு வருவதற்க்கான
சாத்தியக்கூறுகள் அதிகம். எல்லாரும் தூங்கவேண்டிய நேரத்துல நல்ல தூங்குங்க, நல்லா
சாப்பிடுங்க, கெட்ட பழக்கம் இல்லாம நல்லா ஜாலியா இருங்க, மாரடைப்பு கண்டிப்பா
வராது.

மாரடைப்பின் காரணிகளை அழகான தமிழில், எளிதாக புரியும் படி சொல்லியிருக்கீறீர்கள். அருமை. வாழ்த்துக்கள் !!
பதிலளிநீக்கு