மாரடைப்பில் எப்படி புரதம் ஒரு முக்கியமான பங்கு
வகிக்கிறதோ அதே மாதிரி உறைந்த இரத்தத்தை உடைப்பதற்கு நொதிகள் (enzymes) ஒரு
முக்கியமான காரணியாக இருக்கிறது. நம் எல்லாருடைய உடம்பிலும் இந்த நொதிகள்
இருக்கும். சாதாரணமாகவே நமது உடம்பில் அடிக்கடி இரத்தம் உறைந்து போவதற்கு
வாய்ப்புகள் உண்டு. என்னதான் பெரிய கம்பெனியானாலும் 1000000 பொருட்கள் உற்பத்தி
செய்யும் பொழுது ஒன்றிரண்டு பொருட்கள் குறைபாட்டோடு உற்பத்தி செய்யப்படும். அதே
மாதிரி, நமது உடம்பிலும் அதே மாதிரி திடீரென்று சிறு சிறு குறைபாடுகள் தோன்றும்.
ஆக்ஸிஜென் இல்லாமல் தானாகவே இரத்தம் உறைந்து கொள்ளும். இல்லேயேல் உள்காயம்
ஏற்பட்டு இரத்தக்கட்டு ஏற்படுவதற்கும் வாய்ப்புக்கள் உண்டு. இதற்க்கு தான் பரிணாம
வளர்ச்சியின் மூலமாக மனித உடம்பு அங்கங்கே சோதனைச்சாவடிகளை அமைத்துள்ளது. முதலில்
எங்கேயும் தவறுதலாக இரத்தம் உறையாது. முக்கியமாக ஆக்ஸிஜென் தேவை. அது போக
துரோம்பின், பாக்டர் 8, போன்ற புரதங்கள் மற்றும் நொதிகள் தேவை. இதை தாண்டியும்
இரத்தம் உறைந்து விட்டது என்றால் அதை கரைக்கவும் நொதிகள் உற்பத்தியாகிவிடும்.
இந்த உறைந்த இரத்தத்தை உடைக்கும் நொதிகளை
proteolytic enzymes என்று கூறுவார்கள். அதாவது புரதங்களை உடைக்கும் (கரைக்கும்)
நொதிகள். இரத்தம் உறைந்து விட்டது என்று தெரிந்த உடனயே இந்த நொதிகள் அதிகமாக
உற்பத்தி செய்யப்பட்டு விடும். மாரடைப்பில் முதலில் உருவாகிற குருதிக்கட்டு (blood
clot) கூட முதலில் இந்த நொதிகளால் கரைக்கப்பட்டு விடும். மாரடைப்பு தோன்றுவதற்கு
முன்பு பல அறிகுறிகள் தோன்றும். அதில் முதல் அறிகுறி, சிறிது தூரம் நடந்தால் கூட
அதிகமாக வியர்க்கும், இதயம் படபடவென்று அடித்துகொள்ளும். இடது கையில் வலி
தோன்றும். இதில் கண்டிப்பாக சிறிதளவில் குருதிக்கட்டு தோன்றி நொதிகளால் கரைக்கப்பட்டிருக்கும்.
இதை நாம் அலட்சியம் செய்யும் போது தான் அதற்கடுத்ததாக உருவாகிற குருதிக்கட்டு
இன்னும் வலிமையானதாக தோன்றும். நமக்கு
எவ்வளவவு மனஅழுத்தம் இருக்கிறதோ அதே அளவு மிகவும் வலிமையான மாரடைப்பு வருவதற்க்காண
வாய்ப்புகள் மிக அதிகம். குருதிக்கட்டு சிறிதாக இருக்கும் போது உடம்பிலுள்ள
நொதிகளே கரைத்துவிடும். ஆனா குருதிக்கட்டு இன்னும் வலிமையானதாக மாறும்பொழுது
உடம்பிற்கு நொதிகளை உற்பத்தி செய்ய நேரம் போதாது. இதனால் தான் இந்த நொதிகளை தூண்டி
விட்டு உற்பத்தி செய்யக்கூடிய ஒரு புதிய நொதியை உள்ளே செலுத்துவார்கள்
மருத்துவர்கள். அந்த புதிதாய் செலுத்தப்பட்ட நொதிகள் ஸ்ட்ரேப்டோகைநேஸ் அல்லது
யூரோகைநேஸ் வகைகளாக இருக்கும். இதன் வேலை நமது உடம்பில் உள்ள நொதிகளை தூண்டி
விடுவதுதான். சட்டில இருந்தா தானே அகப்பைல வரும்கிற மாதிரி, நமது உடம்பு
ஆரோக்கியமாக இருந்தால் தானே எதிர்பாராமல் மாரடைப்பு வந்தால் கூட காப்பாற்ற
முடியும். உடல் பருமனாக இருப்பவர்கள் சத்து குறைவாக சாப்பிட்டு உடல் எடையை இழக்க
வேண்டாம். அதனால் ஆரோக்கியத்தையும் இழக்க நேரிடும். அதே மாதிரி உடல் இளைத்தவர்கள்
உடம்பை அதே மாதிரி வைத்துகொள்ளவும் சரியாக சாப்பிடாமல் இருக்க வேண்டாம். உடம்பு
ஆரோக்கியமாக இருந்தால் தான் நோய் வந்தால் கூட மருத்துவம் செய்ய இயலும். நல்லா
சாப்பிடுங்க நல்லா வேலைய பாருங்க. தினமும் குறைந்தபட்சம் இரண்டு கிலோமீட்டர்
நடங்க. மாரடைப்பு வராமல் இருக்க மனஅழுத்தம் இல்லாமல் இருப்பது ஒரு முக்கியமான
காரணி. கோவம் வந்தா காமிச்சுடுங்க பிறகு அத பத்தி மறந்துடுங்க. வேலையா இல்ல உயரதிகாரியா, இருக்கவே இருக்கு விளையாட்டு.
நல்லா விளையாடினீங்கன்னா மனஅழுத்தம் முழுக்க குறைந்து விடும். கோவத்த
குறைக்கிறேன்னு டிவியோ இல்ல கம்ப்யூட்டரோ பாக்காதீங்க அது இன்னும் அழுத்தத்தை
அதிகரிக்ககூடும். நல்லா தூங்கி நல்லா சாப்பிட்டாலே மாரடைப்பு கண்டிப்பாக வராது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக