சிகரெட் புகையினால் கான்சர் மட்டும் தான் வருதுன்னு நினைசோம்னா அது ரொம்ப தப்பு. இரத்தக்கொதிப்பு, மலட்டுத்தன்மை (இருபாலருக்கும் தான்), வயிற்றுப்புண், ஒவ்வாமை, தோல் மற்றும் முகம் சுருங்குதல், இவங்களுக்கு எல்லாம் கொம்பன் ஒருத்தன் இருக்கான், மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்). இந்த உலகத்துல செத்தவங்க கணக்க எடுத்து பார்த்தோம்னா அதுல அதிகமான சாவு (30%) இதயம் மற்றும் இதயம் சார்ந்த நாளங்களிள் தான் வருது (cardiovascular diseases) புகைப்பதினால் தான் மாரடைப்பு வருகிறது என்றில்லை, ஆனா புகைப்பழக்கம் முக்கியமான காரணியாக இங்க இருக்கு. நெறைய பேர் நெனச்சுகிட்டு இருக்குற மாதிரி உடல் பருமனானவர்களுக்கு மட்டும் தான் மாரடைப்பு வரும் என்றில்லை. உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பவர்களுக்கும் கூட மாரடைப்பு வரும். மாரடைப்புக்கான முக்கியமான காரணிகளில் புகைப்பழக்கம், மதுப்பழக்கம், மன அழுத்தம், சாப்பிடும் வழக்கம், தூக்கமின்மை போன்றவை முக்கியமானது. நம்ம உடம்புல இரண்டு வகையான கொழுப்பு இருக்கு. HDL மற்றும் LDL. நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்புன்னு வச்சுகுவோமே. நம்ம சாப்படற சாப்பாடு செரிமானம் ஆகி நல்ல கொழுப்பா மாறனும். சாப்படற சாப்பாடுல அதிக கொழுப்பு இருந்தாலோ, இல்ல உடலுக்கு மிக அழுத்தம் கொடுத்தாலோ, கெட்ட கொழுப்பு ஜாஸ்தியாக ஆரம்பிக்கும்.
(image courtesy: http://www.wonderwhizkids.com)
மேலே உள்ள படத்த பாருங்க. நம்ம இரத்த நாளங்களில் இப்பிடி தான் இருக்கும். அத ஒரு சின்ன குழாய் மாதிரி நெனச்சுக்கொங்க. இந்த குழாய் மூலமாக இரத்தம் உடலில் உள்ள அணைத்து இடங்களுக்கும் சென்று கொண்டு இருக்கிறது. மேல நம்ம இதயத்திலிருந்து இரத்தம் கீழே வருவதற்கு எதுவுமே செய்ய வேண்டாம். புவி ஈர்ப்பு விசையே எல்லாமே செய்து விடும். ஆனா கிழே இருந்து மறுபடியும் இதயத்திற்கு வரணும்னா ஒரு அழுத்தம் வேணும்ல, நம்ம வீட்டுல கிணத்துல இருந்து மாடி டாங்க்க்கு தண்ணி எத்தனும்னா மோட்டார் போடுறோம்ல, அதே மாதிரி இதயமும் ஒரு மோட்டார் போல செயல் படுது. தேவையல்லாத பழக்கங்களினால இந்த கெட்ட கொழுப்பு இரத்த நாளங்களில் ஒரு லேயரா படிஞ்சுடுது. இப்ப என்ன ஆகும் இரத்தம் போகற இடம் கம்மி ஆகிடும். தண்ணி வர்ற குழாய்ல சிறிது அழுத்தம் கொடுத்தோம்னா என்ன ஆகும், தண்ணி வெளியேர்ற வேகம் கூடும்ல, அதே தான் இங்க இரத்த நாளன்கள்ல நடக்கும். இதுக்கு பெயர் தாங்க இரத்தக்கொதிப்பு. சரி மாரடைப்புன்னு சொல்லிக்கிட்டு இவன் என்னடா இரத்தக்கொதிப்ப பற்றி பேசுறான்னு பாக்கறீங்களா, இரண்டுக்கும் மிக நெருங்கின தொடர்பு உண்டு. உடம்பிலுள்ள அணைத்து நாளங்களில் கொழுப்பு படர்வதால் இரத்தக்கொதிப்பு வரும், ஆனா இதே இதயம் சம்பந்தப்பட்ட நாளங்களில் படரும்போழுது மாரடைப்பு வருவதற்க்கான வாய்ப்புகள் அதிகம். இதயத்திற்கு இரத்தம் தரும் நாளங்களில் கொழுப்பு படரும் பொழுது, நமது தேவை இல்லாத பழக்கங்களினால் இரத்தம் நாளத்திற்கு உள்ளயே உறைய ஆரம்பிக்கும். இந்த உறைந்த இரத்தம் நாளத்தை அடைத்துக்கொண்டு இரத்தம் மேற்கொண்டு செல்ல விடாமல் தடுக்கும். இதனால் இதயத்திற்கு இரத்தம் செல்லாது, முதலில் இதயம் சரிவர இயங்காது, பின்னர் இயங்காமலே போய்விடும். இதுதான் மாரடைப்பு. மாரடைப்பின் முதல் அறிகுறி, இடது கையில் வலி ஏற்படும். எப்பொழுது நெஞ்சில் எரிச்சலும், அளவுக்கு அதிகமான வியர்வை வெளியேற்றம், இடது கையில் வலியும் ஏற்படுகிறதோ உடனே ஒரு மருத்துவரை சென்று பாருங்கள், மாரடைப்பின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக