மருத்துவத்தில் உயிரி தொழில்நுட்பவியல் – இதில் இரண்டு வகை உண்டு. மெடிக்கல் பயொடேக்னாலஜி மற்றும் ஃபார்மாசுடிகல் பயொடேக்னாலஜி. மேலோட்டமாக பார்த்தல் இரண்டுக்குமே வித்தியாசம் கம்மி. இரண்டுமே ஒரு வியாதிக்கு மருந்து கண்டுபிடிப்பதற்க்காக செயல்படுகிறது. ஆனால் செயல்பாட்டளவில் இரண்டுமே வேறு. மெடிக்கல் பயொடேக்னாலஜியை எடுத்துக்கொண்டால் ஒரு வியாதி எப்படி வருகிறது? எந்தெந்த இடத்தில் அதற்கான தீர்வுகளை காணலாம் என்று ஆராய்ச்சி செய்து கடைசியில் மருந்து கண்டுபிடிப்பது. ஃபார்மாசுடிகல் பயொடேக்னாலஜியில் முதலில் மருந்தை தேர்வு செய்துவிட்டு பிறகு அதற்கான செயல்பாடுகளை ஆராய்வார்கள். மெடிக்கல் பயொடேக்னாலஜி பின்பற்றுகிறவர்களுக்கு செல் பயாலஜி மற்றும் மாலிகுலர் (மூலக்கூறு) பயாலஜி பற்றி நன்றாக தெரிந்திருக்கும். ஆனால் ஃபார்மாசுடிகல் பயொடேக்னாலஜி பின்பற்றுகிறவர்களுக்கு இம்யுனாலஜி (நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய துறை) சிந்தடிக் கெமிஸ்ட்ரி நன்றாக தெரிந்திருக்கும். இதுவும் சில காலம் முன்பு வரை தான். தற்பொழுது இரண்டுமே கிட்டதட்ட ஒன்றாகி விட்டது. இணையத்தில் அள்ள அள்ள குறையாத தகவல்கள் கிடைக்கின்றன, அதிலும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு மிகவும் சுலபமாக புரிவதற்கு மிக எளிய மொழிகளில் நோட்ஸ் குடுத்துக்கொண்டிருக்கிரார்கள், இதை படித்தால் கொஞ்சம் பயொடேக்னாலஜி தெரிந்தவர்களுக்கு மிகவும் சுலபமாக புரிந்துவிடும். இது போக ரிவ்யூ ஆர்டிக்கள்களை (அந்த வரையெல்லையில் உள்ள முக்கியமான ஆராய்ச்சிக்கட்டுரைகளை அலசி, அதன் சாரங்களை தொகுத்து வழங்கும் கட்டுரை) படிக்கும் பொழுது 200-300 ஆராய்ச்சிக்கட்டுரைகளை படிக்கும் சாரம் நமக்கும் கிடைத்துவிடும். இதிலிருந்து நாம் நமது ஆராய்ச்சிகளை எப்படி வித்தியாசமாக எடுத்துச்செல்லலாம் என்று நாம் தான் தீர்மானிக்க வேண்டும். அது நாம் நினைத்த பலன்களை தரலாம், தாராமலும் போகலாம். பிறகு செய்த மற்றும் படித்த தகவல்களை கொண்டு ஆராய்ச்சியை வேறுதிசையில் கொண்டு செல்லவேண்டும்.
(courtesy: www.funnytimes.com)
ஒரு வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்றால் அதற்கு மூன்று படிகள் உண்டு.
1. முதலில் வியாதிக்கான பாத்தோலஜி தெரிந்திருக்க வேண்டும் (எப்படி ஒரு வியாதி வருகிறது, உடம்பில் எந்த இடத்தில் தாக்கி இருக்கு, இன்னும் பல).
2. தீர்வுக்கான சாத்தியக்கூறுகள் (பழைய ஆராய்ச்சிக்கட்டுரைகளை நன்றாக படித்திருக்க வேண்டும்) (சாமர்த்தியமும் இந்த இடத்தில் அவசியம்).
3. என்னன்ன பக்க விளைவுகள் வரக்கூடும்.
கண்டிப்பாக பல ஆராய்ச்சிகள் தோல்வியில் தான் முடியும். ஏனென்றால் எல்லாமே ட்ரயல் அண்ட் எரர் (சோதனை மற்றும் பிழைகள்) முறை தான். அந்த தோல்வியான ஆராய்ச்சியின் மூலமாக கிடைத்த தகவல்களை நாம் எடுத்துக்கொண்டு பிறகு விட்ட இடத்திலிருந்து தொடங்க வேண்டும்.
சரி இப்பொழுது மாரடைப்பை எடுத்துக்கொள்வோம். மூன்று படிகளின் படி
(courtesy: www.foxnews.com)
1. எப்படி வருகிறது? நாம் அதிகமாக மனவுளைச்சலில் இருக்கும் பொழுதோ அல்லது அதிகமான கொலஸ்ட்ரால் உணவுகளை சாப்பிடும் பொழுதோ இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. இதனால் இரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் படிகிறது, பிறகு இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது, இது இரத்தத்தை நாளங்களிலே உறைய வைக்கிறது, உறையும் இரத்தம் இருதயத்திற்கு செல்லும் நாளங்களில் இருந்தால் இருதயத்தின் செயல்பாடு படிப்படியாக குறைந்து நின்றுவிடும்.
2. எங்கே மற்றும் என்ன தீர்வு? நமது குறிக்கோள் தற்பொழுது இருதயத்திற்கு செல்லும் வழியில் உள்ள அடைப்பை எடுத்துவிட்டால் மறுபடியும் இருதயம் சாதரணமாக செயல்படக்கூடும். அந்த அடைப்பு எதனால் ஆனது? புரதம். அப்படி என்றால் புரதங்களை கரைக்கும் நொதிகளை பயன்படுத்த முடியுமா என்று ஆராய்ச்சி செய்யலாம்.
3. பக்கவிளைவுகள் – இருக்கிறது, தண்ணீர் குறைவாக இருக்கும் பொழுது மழை வந்தால் பயிர்கள் எப்படி அழுக தொடங்குமோ அதேபோல சிறிது நேரமே இரத்தம் செல்லாத இடத்திலயும் உடனே அடைப்பை பொத்துக்கொண்டு இரத்தம் பாயும் பொழுது அந்த பாதிக்கப்பட்ட நாளங்ளினால் தாங்க முடியாது, இருதயத்தின் செயல்பாடு இன்னும் மோசாமாக போககூடும், செயல்படாமலே போககூட கூடும்.
இந்த ஆராய்ச்சிகள் மூலமாக இன்றைக்கு யுரோகைநேஸ் மற்றும் ஸ்ட்ரேப்டோகைநேஸ் என்ற நொதிகள் மாரடைப்பிற்கு பயன்படுத்தப்படுகின்றன. (ஸ்டன்ட்கள் மற்றும் பலூன் ப்ளாஸ்ட் போன்ற முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன).
மேலே உள்ள படத்தில் இருதயத்திலுள்ள நாளங்கள் கருப்பு நிறத்தில் தெரிகின்றது. (a) படத்தில் பார்த்தால் உறைந்த இரத்தினால் நாளம் பாதியிலே இரத்தத்தை எடுத்து செல்வதை நிறுத்தி விடுகிறது, (b) படத்தில் அந்த இடத்தில் உள்ள உறைந்த இரத்தத்தை த்ரோம்போலயிசிஸ் (நொதிகள்) மூலமாக அகற்றப்பட்டு இரத்தம் அந்த பாதித்த இடத்தை தாண்டி செல்வதை பார்க்கலாம், (c) பிறகு அந்த இடத்தில் ஸ்டன்ட் வைக்கப்படுகிறது. (image courtesy : http://www.mims.com)
சரி இந்த ஆராய்ச்சி மூலமாக சில நொதிகள் கிடைத்திருகின்றன அவ்வளவ்வு தானே என்கிறீர்களா?
முதலில் இந்த ஆராய்ச்சிகளினால் கிடைத்த தகவல்களை பார்ப்போம்.
1. மாரடைப்பிற்கு காரணம் கெட்ட கொலஸ்ட்ரால்
2. சாப்பிடும் பழக்கம்
3. பருமனானவர்களுக்குதான் மாரடைப்பு வரும் என்பது தப்பான எண்ணம் - எல்லாருக்கும் வரக்கூடும்.
4. மன அழுத்தமோ இல்லை இரத்தக்கொதிப்போ இருந்தால் மாரடைப்பு வரக்கூடும்
5. குறைவான வலி மற்றும் நேரம் சேமிக்கும் சிகிச்சைகள்
6. குறைந்த செலவில் சிகிச்சை.
இது எல்லாம் ஒரு சில ஆராய்ச்சிகூடங்கள் பல வருடங்களாக ஆராய்சிகளை நடத்தி கண்டுபிடித்தவை. இன்னும் பல நடந்துகொண்டே இருக்கிறது. வெவ்வேறு வியாதிகளுக்கும் நடந்துகொண்டிருக்கிறது.
இந்த தகவல்கள் நமது முன்னோர்களுக்கும் தெரிந்திருக்க கூடும்.
தயிர் – இது மாரடைப்பை தடுப்பதற்க்கான அருமையான உணவு. தயிரிலுள்ள லக்டோபேசில்லஸ் எனப்படும் நுண்ணுயிர்கள் உணவிலுள்ள பல அசுத்தமான கெமிக்கல்களை அகற்றுவதுடன் நல்ல கொழுப்பையே தருகிறது. கெட்ட கொலஸ்ட்ரால்களை கூட அகற்றி விடுகிறது. இதனால் தான் நமது உணவில் தயிரை கடைசியாக சாப்பிடுவோம். இதுபோக நாம் உடற்பயிற்சி செய்வதும் அவசியம் தினமும் குறைந்தபட்சம் 3 கி.மீ. நடக்க வேண்டும். ஏன்னா சும்மா இருந்தோம்னா நல்ல கொழுப்பு கூட கெட்ட கொழுப்பா மாறிடும்கோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக