origin of life – உயிர் எப்படி உருவாகிற்று...? இந்த கேள்வி இப்போ
எதுக்குன்னு கேக்குறீங்களா? நானும் எழுதனும்ல அதுக்கு தான் இப்படி ஆரம்பிக்கிறேன். உயிர் எப்படி உருவாச்சுனு தெரிஞ்சா தான் புகைப்பழக்கதினாலே எப்படி
பாதிக்கப்படுறோம்னு தெரியும். பல பேர் பல தியரிகளை அடுக்கியிருக்காங்க. ஆனா ஒன்று மட்டும் நிச்சயமாக சொல்லமுடியும்ங்க. முதமுதல்ல நீருக்குள்ள தாங்க உயிர்
உருவாச்சு. உயிர் தோன்ற முக்கியமான தேவை நான்கு அணுக்கள் தான். கார்பன்,
ஹைட்ரோஜன், ஆக்சிஜன் மற்றும் நைட்ரோஜன். முதல் உயிர் உருவாகும்போது இந்த உலகத்திலே
அது மட்டும் தாங்க உயிர். அது கண்டிப்பாக ஒரு செல் உயிரியாகதான் இருந்திருக்க
வேண்டும். அதற்கு பின் பல மாற்றங்கள். மரபணு மாற்றங்கள் (mutations) அந்த ஒரு செல்
உயிரியிருந்து பல உயிர்கள் தோன்றின. பிறகு நீரிலிருந்து நிலத்திற்கு தன்னை
மாற்றிக்கொண்டது. இப்போ நம்ம என்ன நினைக்கிரோம்ன நம்ம காற்றை சுவாசிக்கிறோம்னு
என்று. ஆனால் நம்ம உடம்புல எந்த செல்லும் அப்படியே காற்றில் இருக்குற ஆக்சிஜனை
உபயோகப்படுத்த முடியாது. நம்ம செல்லுகுள்ள போகனும்னா ஆக்சிஜன் கண்டிப்பாக நீரில்
கரைந்து இருக்கணும். இதுதான் உயிர் முதலில் உருவானதிலிருந்து தற்பொழுது வரைக்கும்
நடக்கின்ற முறை. இங்க தண்ணீருக்கு பதிலா இரத்தம். நம்ம சுவாசிச்ச உடனே முதல்ல
ஆக்சிஜன் இரத்தத்தில் இருக்கும் ஹீமோக்லோபின் (hemoglobin) என்ற புரதத்தின் கூட சேர்ந்துக்கும். நம்ம
இரத்தம் சிகப்பா இருக்க காரணமே இந்த ஹீமோக்ளோபின் புரதம் தாங்க. பிறகு நம்ம இதயம் துடிக்கும் பொழுது தேவையான இடத்திற்கு இரத்தம்
கொண்டு செல்லப்படுகிறது. தேவையான இடத்தில் ஆக்சிஜனை கொடுத்துட்டு, அங்கே உள்ள
கார்பன் டைஆக்சைடை எடுத்துகிட்டு நுரையீராலுக்கு கொண்டுவந்து சேர்க்கும்
(பண்டமாற்று முறை தான்). இந்த சுழற்சி நிதமும் நடந்துகொண்டு தாங்க இருக்கும். இப்படி
தாங்க நம்ம சுவாசிக்கிறேம். இங்கே நாம இன்னொரு விஷயத்த கவனிக்கணும், இது நாம் தினமும்
பார்க்கறதுதான். கார்பன் மோனாக்சைட். இது சிகரெட் புகை, சரியாக பழுதுநீக்காமல்
உபயோகிக்கப்படும் வாகனத்தின் (இருசக்கர வாகனமும் அடக்கம்) புகை மற்றும்
பிளாஸ்டிக், தெர்மொகோல் போன்ற பொருட்களை எரிக்கும் புகையிலும் அதிகமாக இருக்கும்.
ஹீமோக்லோபின் புரத்திற்கு ஆக்சிஜன், கார்பன் டைஆக்சைடை விட கார்பன் மோனாக்சைட்
மேல் பிரியம் ஜாஸ்தி (கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி
வப்பாட்டி வச்சுப்பாங்கள்ல அது மாதிரி). ஒரு தடவ அவங்க சேர்ந்துட்டாங்கனா அவங்கள
பிரிக்கவே முடியாது. அப்ப அந்த புரதம் இருந்தும் இல்லாத மாதிரிதான். காற்று
மாசுபடுகின்றதனால உருவாகும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. இதில் தம் அடிக்கறவங்க
விடுற புகையினால, அடிக்கறவங்க மட்டுமில்ல அவரை சுற்றி உள்ள அனைவரையும் பாதிக்கும்.
இதில் மிகவும் மோசமான செயல் என்னன்னா ஒரு சில பேர் குழந்தைகளோட தம் அடிக்க
வருவாங்க. அப்ப அவங்ககிட்டே கெட்ட வார்த்தைல திட்டனும் போல இருக்கும்.
குழந்தைகளின் நுரையீரல் மற்றும் இதர பாகங்கள் மிகவும் மென்மையாக இருக்கும்.
குழந்தைகள் சிகரெட் புகையை சுவாசிச்சால் சீக்கிரம் ஆஸ்த்மா போன்ற வியாதிகள் கண்டிப்பாக
வரும். இதுனால நான் சொல்றது என்னன்னா எங்கயாவது எந்த _____அவது புகை பிடிச்சான்னா
கண்டிப்பாக அந்த இடத்துல இருக்காதீங்க. அதுலயும் பெண்கள் கண்டிப்பாக இருக்க
வேண்டாம் (குழந்தைகள் மற்றும் கர்பப்பையில் பிரச்னை வருவதற்கான வாய்ப்புகள்
உள்ளன). புற்றுநோய், ஆஸ்த்மா, பல சுவாசகோளாறுகள் வருவதார்கான வாய்புகள் மிக
அதிகம். உஷார்!!!
சரி தான் தெரிஞ்ச விஷயம் தான் ஆனா சொன்ன விதம் நல்லாருக்கு நண்பா..தொடர்ந்து எழுத ஊக்கம் இருக்கட்டும்..
பதிலளிநீக்குநன்றி நண்பா... பலகாலம் தயங்கி இப்பொழுதுதான் தொடங்கி இருக்கிறேன்.... தொடர்ந்து எழுத முயற்சி செய்வேன்..
நீக்குவாழ்த்துக்கள் அண்ணா.... கூடிய விரைவில் சமூகம் சார்ந்த பதிவுகளையும் எழுதுங்கள்
பதிலளிநீக்குசமூகம் சார்ந்த பதிவுகளை தரும் அளவிற்கு இன்னும் பக்குவம் அடையவில்லை என்று நினைக்கிறேன்... கண்டிப்பாக எதிர்காலத்தில் வரும்
நீக்கு