பயொடேக்னாலஜிக்கான வரையெல்லை சமீபத்தில்
விரிவடைய தொடங்கி உள்ளது. மருந்து கண்டுபிடிப்பிற்கும் சில உயிரி பொருட்களை
பெருமளவில் தயாரிப்பதில் மட்டும் தான் பயொடேக்னாலஜி பயன்படும் என்று முன்னர்
கருதப்பட்டது. ஆனால் பயொடேக்னாலஜி தொழில்நுட்பம் தற்பொழுது எல்லா துறைகளையும்
ஆக்ரமிக்க ஆரம்பித்துள்ளது. பல துறைகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பயொடேக்னாலஜியை
பயன்படுத்ததொடங்கி உள்ளனர். இன்டஸ்ட்ரியல் (தொழில்சார்), பிளான்ட் (தாவர),
மெடிக்கல் மற்றும் ஃபார்ம்மாசுடிகல் (மருத்துவ), மரைன் (கடல்சார்),
என்விரோன்மெண்டல் (சுற்றுசூழல்), பயோஇன்போர்மடிக்ஸ் (கணினியில் உயிரி
தொழில்நுட்பவியல்), இவை அனைத்தும் பயொடேக்னாலாஜியின் உட்பிரிவிகள். ஆனால்
ஒவ்வொன்றும் எதாவது ஒரு விதத்தில் அணைத்து பிரிவுகளோடும் சம்பந்தப்பட்டிருக்கும். முன்காலத்தில்
பயொடேக்னாலஜி என்பது எளிய முறையில் அதாவது வெவ்வேறு குணாதிசயம் கொண்ட செடிகளின் மகரந்த
சேர்க்கை போன்றவை மூலமாக செயல்பட்டு வந்தது (அப்பொழுது பயொடேக்னாலஜி என்ற பெயர்
உருவாகிருக்கவில்லை). ஆனால் டிஎன்ஏ உருவகத்தை கண்டுபிடித்த பின் தற்பொழுது ஜெனெடிக்
இன்ஜினியரிங் மூலமாக டிஎன்ஏவையே மாற்றி அமைத்து தேவையான குணங்களை பெற்றுவிடலாம். உதாரணமாக
செடியில் பூ சிகப்பு நிறமாக வேண்டாம், பச்சை நிறமாக வேண்டும் என்றால் அதை சுலபமாக
செய்யலாம், இயற்க்கைகாக காத்திருக்க வேண்டாம்.
சற்று அடிப்படையான விஷயங்களை தற்பொழுது
பார்ப்போம், இதை தெரிந்து கொண்டால் பயொடேக்னாலஜி மிகவும் சுலபம்.
Gene
– ஜீன் - எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படை
இது தான். சில பல டிஎன்ஏக்கள் வரிசையாக சேர்ந்து, செயல்படும் புரதத்தை
உற்பத்தி
செய்தால் அதன் பெயர் ஜீன் (genes – ஜீன்ஸ் – பன்மை). என்னாடா டிஎன்ஏங்கறான், புரதங்கறான் ஒண்ணுமே புர்லபாங்க்ரீன்களா... நமது உடலை
எடுத்துகொள்ளுங்கள். மூளை தான் நமக்கு என்ன செயல் செய்யவேண்டும் என்று
சொல்கிறது
என்று எல்லாருக்கும் தெரியும். சரி நம் மீது கொசு உட்காரும் போது என்ன
செய்வோம்,
அந்த கொசுவை அடிப்போம் அல்லது விரட்டிவிடுவோம். அதில் கொசு வந்து
உட்காருவது
சமிக்கை. அது மூளைக்கு செல்லும். பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை மூளை
சொல்லும்.
வலது/இடது கையை வைத்து அடிக்கலாமா? எவ்வளவவு வேகத்தில் அடிப்பது எல்லாம்
நொடிக்கணக்கில் கணக்கீடு செய்து கொசு அடிப்போம். அதே போல செல்லுக்கு
வரக்கூடிய
சிக்னலை புரிந்து கொண்டு அதற்க்கு என்ன புரதம் தேவை என்று கணக்கீடு செய்து
புரதத்தை உருவாக்குவது தான் மூளை என்ற டிஎன்ஏவின் வேலை. சாப்பிட்டதை
செரிப்பதர்க்கும், செரித்ததை உடலில் சேர்ப்பதற்கும், நோய் எதிர்ப்பு
சக்திக்கும் ஏன்
மனிதன் செய்கின்ற அனைத்திற்குமே இந்த புரதங்கள் தான் அடிப்படை. இப்படி கூட
சொல்லலாம். டிஎன்ஏ – தலைவன், புரதம் – அடியாள். சொன்ன வேலைய கரிக்டா
செய்வாரு. இது
போக, இந்த புரதங்கள் சில பல சேர்மங்களையும் உற்பத்தி செய்யும்.
தேவையானவற்றை உடல்
எடுத்துக்கொண்டு (வைட்டமின் D), தேவையில்லாதவற்றை வெளியேற்றி விடும்
(யூரியா).
சயின்சஸிலும் மூடநம்பிக்கைகள் இல்லாமல் இல்லை.
17-ம் நூற்றாண்டுக்கு முன், உயிர்கள் உயிரற்ற அல்லது வேறொரு உயிரின் மூலமாகவே
சட்டென்று அந்த நொடியே உருவாக்க பட்டதாகவே நினைத்துக்கொண்டிருந்தனர். உதாரணமாக ஃப்லீ
(flea) என்ற சிறு பூச்சிகள் (ப்ளேக் நோய் பரவுவதற்க்கு இதுதான்
காரணம்) மண் துகள்களில் இருந்து உருவாகுவதாகவும், மாக்கோட்ஸ் என்ற புழுக்கள்
(ஈயின் புழு வடிவம்), உயிரற்ற உடல்களில் இருந்து தானாகவே உருவாகுவதாகவும் சொன்னார்கள்.
அரிஸ்டாட்டில் முதல் பதினெட்டாம் நூற்றாண்டுகள் வரை அதுதான் நிலைமை. இதில் வான்
ஹெல்மொன்ட் (1580–1644) என்றவர் கோதுமையையும் ஒரு அழுக்கு துணியையும் 21 நாட்கள் அப்படியே வைத்திருந்தால், எலிகள்
உருவாகும், செடிகளின் எடை கூடுதல் தண்ணீரை உறிஞ்சுவதால் மட்டுமே (அந்த நேரத்தில் photosynthesis கண்டுபிடிக்கப்படவில்லை) நடக்கிறது என்று கூறினார்.
பாஸ்சர் பயன்படுத்திய அன்னக்கழுத்து குடுவை
(courtesy: wikipedia)
இது அனைத்திற்கும் பதில் லூயிஸ் பாஸ்சர் (1822 – 1895) ஆய்வுகளின் மூலமாக கிடைத்தது. 1859-ல் அவர் ஆய்வு செய்த ஸ்வான் நெக் பிளாஸ்க்
பரிசோதனை (அன்னக்கழுத்து குடுவை பரிசோதனை) மூலமாக தெளிவாகியது. குடுவைகளை
எடுத்துகொண்டார். இரண்டிலுமே சிறு இறைச்சியை கூழ் மாதிரி அரைத்து நன்றாக தண்ணீரில் வேக வைத்தார். பிறகு அப்படியே
சில காலம் வைத்திருந்தார். உள்ளே உள்ள இறைச்சி கூழ் கெடவில்லை. பிறகு குடுவையை
சாய்த்து வெளியில் உள்ள கழுத்தின் ஓரத்தை உள்ளே இருக்கும் கூழ் படுமாறு செய்து அதை
சில நாட்கள் வைத்திருந்தார். உள்ளே கூழ் கெட்டுபோவதை அவரால் அவதானிக்க முடிந்தது.
இந்த பரிசோதனை தான் ஸ்பான்டேனியஸ் ஜெனரேஷன் (சட்டென்று உயிர் உருவாகுதல்)
தத்துவத்திற்கு முடிவு கட்டியது. ஏனென்றால் முன்னே சொன்னது போல இறைச்சியில்
இருந்து புழுக்கள் உருவானதென்றால் இப்பொழுதும் உருவாகி இருக்க வேண்டும், ஆனால் உருவாகவில்லை.
இது மட்டும் அல்ல பாஸ்சர் பல கண்டுபிடிப்புகளை நடத்தி உள்ளார். இன்று நம் செய்யும்
பால் காய்ச்சுதல் முறைக்கு பாஸ்ச்சரைசேஷன் என்று பெயர். எட்வர்ட் ஜென்னெர் (1749-1823) உருவாக்கிய வாக்சினைசேஷன்
(நோய் தடுப்பு முறை) முறை மீது மேலும் பல ஆராய்ச்சிகள் செய்தார்.
மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்கள் நோய் தடுப்பு
முறைகளுக்கு முன்னதாகவே இந்திய பாரம்பரியத்தில் நோய் தடுப்பு முறைகளுக்கு முக்கியத்துவம்
குடுக்கப்படுள்ளது. சாணம் மொழுகுதல், மஞ்சள் கரைத்து தெளித்தல், சாம்பிராணி/தூபம் ஏற்றுதல் எல்லாமே
நோய் தடுப்பு முறைதான். சாணம் ஒரு மிகச்சிறந்த கிருமிநாசினி (அதுக்காக மொசைக்
தரையிலே சாணம் வச்சு மொழுக முடியாது). மஞ்சளும் அப்படிதான். மஞ்சளுக்கு கிருமிகளை
அழிப்பது முதல் புற்றுநோய் அழிப்பது வரை பல நமக்கு நன்மை தரும் விளைவுகளாகவே
உள்ளது. சாம்பிராணி ஏத்துதல் தான் இன்று fumigation (ஃப்யுமிகேஷன்) என்று ஆராய்ச்சி
கூடங்களில் செய்யப்படுகிறது. சாம்பிராணி புகைக்கு காற்றில் உள்ள கிருமிகளை
அழிக்கும் வல்லமை உள்ளது.
நம் பின்பற்றும் பல பழக்கங்கள் நம்
முன்னோர்களால் நம் நன்மைக்கே வகுக்கப்பட்டுள்ளது. சில மூடநம்பிக்கைகளும் அதில் கலந்துள்ளது. அதற்காக இன்றைய அறிவியல் சிறுமை என்று முற்றிலும் ஒதுக்கி
விடமுடியாது. அறிவியல் மூலமாக நம் முன்னோர்களால் தொகுக்கப்பட்ட பழக்கங்களுக்கு விளக்கம்
பெறவேண்டும் என்பதே என்னுள்ளதிலிருக்கும்
எண்ணம்.
